/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நீலமங்கலத்தில் சேதமடைந்த தரைப்பாலம்
/
நீலமங்கலத்தில் சேதமடைந்த தரைப்பாலம்
ADDED : ஜன 17, 2024 07:28 AM

பவுஞ்சூர்: பவுஞ்சூர் அருகே நீலமங்கலம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
பாரதி நகர் 5வது தெருவில் உள்ள சிமென்ட் சாலையில் மழைநீர் கால்வாயை கடந்து செல்லும் தரைப்பாலம் உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் பருவமழையின் போது சாலையில் கனரக வாகனம் சென்ற போது, பாரம் தாங்காமல் தரைப்பாலம் சேதமடைந்தது.
இந்நிலையில், தற்போது வரை பாலம் சீரமைக்கப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் புதிதாக அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள தரைபாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

