/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி விமரிசை
/
துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி விமரிசை
ADDED : ஜூன் 16, 2025 01:53 AM

மதுராந்தகம்,:அருங்குணம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி,, விமரிசையாக நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அருங்குணம் ஊராட்சியில், நுாறாண்டுகள் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, அக்னி வசந்த உற்சவம், கடந்த மாதம் 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவையொட்டி, தினமும் மதியம் 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, மஹாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
கடந்த 10 நாட்களாக இரவு 9:00 மணிக்கு, ஜலக்கிரிடை , சுமத்திரை திருமணம், பகடை ஆடுதல், துகில் உரிதல், அபிமன்யூ சண்டை, அர்ஜூனன் தபசு, கர்ணன் போர் என மஹாபாரத தெருக்கூத்து நாடகம் நடந்தது. நேற்று, காலை 10:00 மணிக்கு அரவான் களபலி, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. பின் திரவுபதி அம்மனுக்கு, கூந்தல் முடித்து, பூச்சூட்டும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6:00 மணிக்கு தீ மிதி திருவிழா நடந்தது.
பூங்கரகம் அலங்கரித்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்த பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். இன்று, தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது.