/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு பள்ளி அருகே குப்பை குவிப்பு கலெக்டர் உத்தரவிட்டும் அகற்றாத அவலம்
/
அரசு பள்ளி அருகே குப்பை குவிப்பு கலெக்டர் உத்தரவிட்டும் அகற்றாத அவலம்
அரசு பள்ளி அருகே குப்பை குவிப்பு கலெக்டர் உத்தரவிட்டும் அகற்றாத அவலம்
அரசு பள்ளி அருகே குப்பை குவிப்பு கலெக்டர் உத்தரவிட்டும் அகற்றாத அவலம்
ADDED : செப் 29, 2025 01:27 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோவளம் ஊராட்சியில், அரசு மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது.
இப்பள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறையின் பின்புறம், கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக, ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது.
குப்பையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், பள்ளி வகுப்பறையில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாணவர்களுக்கு ஒவ்வாமை, வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், பல்வேறு மர்ம நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
பள்ளி அருகே கொட்டப்படும் குப்பையை அகற்ற வேண்டுமென, ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், இப்பகுதியில் மலை போல குப்பை குவிந்து வருகிறது.
இதுமட்டுமின்றி, மழைக்காலங்களில் குப்பையிலிருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் சமீபத்தில், மாவட்ட கலெக்டர் சினேகாவிடம் தெரிவித்தார். இதையடுத்து, குப்பையை அகற்ற வேண்டும் என, ஊராட்சிகள் உதவி இயக்குநருக்கு, கலெக்டர் சினேகா உத்தர விட்டுள்ளார்.
மாணவர்கள் நலன் கருதி, உடனே இந்த குப்பையை அகற்ற வேண்டுமென, பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.

