/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுமி கர்ப்பம் உறவினர்களுக்கு வலை
/
சிறுமி கர்ப்பம் உறவினர்களுக்கு வலை
ADDED : பிப் 29, 2024 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:வட மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, சென்னை காசிமேடில் தாயுடன் வசிக்கிறார். நேற்று சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, சிறுமியை ராயபுரத்திலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில், அவர் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.
இது குறித்து, ராயபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர், 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
இதில், சிறுமிக்கு அண்ணன் முறையில் உள்ள மூன்று பேர், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்தது. தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த வட மாநில வாலிபர்கள் மூவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

