/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நல்லாமூர் சுகாதார நிலையத்தில் புதிய கட்டடத்திற்கு பூமி பூஜை
/
நல்லாமூர் சுகாதார நிலையத்தில் புதிய கட்டடத்திற்கு பூமி பூஜை
நல்லாமூர் சுகாதார நிலையத்தில் புதிய கட்டடத்திற்கு பூமி பூஜை
நல்லாமூர் சுகாதார நிலையத்தில் புதிய கட்டடத்திற்கு பூமி பூஜை
ADDED : ஜன 26, 2024 12:11 AM
சித்தாமூர்:சித்தாமூர் அருகே நல்லாமூர் கிராமத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. கொளத்துார், கோட்டிவாக்கம், காட்டுதேவாத்துார், நல்லாமூர், கீழ்கரணை என, 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு, இதுவே பிரதான அரசு சுகாதார நிலையமாகும்.
தினசரி, நுாற்றுக்கணக்கான புறநோயாளிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
ஆனால், போதிய இடவசதி இல்லாததால், நோயாளிகள் மற்றும் செவிலியர்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக, புதிய கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, 1.23 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 4,050 சதுர அடி பரப்பளவில், புறநோயாளிகளுக்கு புதிய கட்டடம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை, நேற்று நடந்தது.
இதில், மதுராந்தகம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மரகதம் பங்கேற்று, அடிக்கல் நாட்டி, கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார்.