/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போதை பொருள் விற்ற மூவருக்கு 'குண்டாஸ்'
/
போதை பொருள் விற்ற மூவருக்கு 'குண்டாஸ்'
ADDED : ஜூன் 06, 2025 09:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னையில், சமூக வலைதளம் வாயிலாக, மெத் ஆம்பெட்டமைன் போதைப்பொருளை விற்ற வகையில், பிராட்வேயை சேர்ந்த சரத்குமார், 30; பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த காதர் மொய்தீன், 31, ராமநாதபுரத்தை சேர்ந்த இம்ரான் நசீர், 25, ஆகிய மூவரையும், தலைமைச் செயலக குடியிருப்பு போலீசார், இம்மாதம் 1ம் தேதி கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, 50,000 ரூபாய் மதிப்புள்ள 16 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
இம்மூவரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததை அடுத்து, மூவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.