/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மழை பாதித்த நெல் வயல்களை மதுராந்தகம் எம்.எல்.ஏ., ஆய்வு
/
மழை பாதித்த நெல் வயல்களை மதுராந்தகம் எம்.எல்.ஏ., ஆய்வு
மழை பாதித்த நெல் வயல்களை மதுராந்தகம் எம்.எல்.ஏ., ஆய்வு
மழை பாதித்த நெல் வயல்களை மதுராந்தகம் எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : ஜன 09, 2024 10:43 PM

மதுராந்தகம்:கடந்த இரு தினங்களாக கொட்டித் தீர்த்த கனமழையால், மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில், 3,000த்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர், நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.
ஏரிகளில் நீர் நிரம்பி, கலங்கல் மற்றும் மதகுகள் வழியாக வெளியேறப்படும் உபரி நீராலும், மழைநீராலும் நெற்பயிர் நீரில் மூழ்கி சேதமடைந்தது.
ஏக்கருக்கு, 25,000ரூபாய் செலவு செய்து பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர், நீரில் மூழ்கி வீணானதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தேவாத்துார், காவாத்துார், வீராணகுன்னம் மற்றும் தச்சூர் பகுதிகளில் விவசாயம் செய்யப்பட்டிருந்த விளை நிலங்கள், நீரினால் சூழ்ந்து கடல் போல் காட்சி அளித்தன.
சேதமடைந்த பயிர்களை, நேற்று மதுராந்தகம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மரகதம், மதுராந்தகம் வேளாண்மை உதவி இயக்குனர் பொறுப்பு ஷீலா மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.