/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
/
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 26, 2024 12:13 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், 14வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, தேர்தல் விழிப்புணர்வு பேரணியை, செங்கல்பட்டு கலெக்டர் வளாகத்தில், கலெக்டர் ராகுல்நாத் நேற்று துவக்கி வைத்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, சப் -- கலெக்டர் நாராயண சர்மா, முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஜி,எஸ்.டி., சாலை வழியாக சென்ற பேரணி, ராட்டினங்கிணறு அருகில் முடிந்தது. இதில், ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லுாரி மாணவர்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
மேலும், தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, லோக்சபா தேர்தலையொட்டி, சோழிங்கநல்லுார், தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம் - தனி, செய்யூர் - தனி ஆகிய சட்டசபை தொகுதிகளில், தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஏழு வாகனங்களை கலெக்டர் ராகுல்நாத் துவக்கி வைத்தார்.

