/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெரியவெண்மணி பள்ளிக்கு புதிய கட்டடம் திறப்பு
/
பெரியவெண்மணி பள்ளிக்கு புதிய கட்டடம் திறப்பு
ADDED : ஜன 26, 2024 12:10 AM
செய்யூர்:செய்யூர் அருகே பெரியவெண்மணி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை, 62 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
அப்பகுதியில் செயல்படும் தனியார் கல் குவாரி மூலமாக, 'நம்ம ஊரு; நம்ம பள்ளி' திட்டத்தின் கீழ், பள்ளிக்கு 12 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், புதிய கட்டடம் அமைக்கப்பட்டு, அதன் துவக்க விழா, நேற்று நடந்தது.
இதில், நெடுஞ்சாலைத் துறை திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு முதன்மை பொறியாளர் சேகர் பங்கேற்று, புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.
கட்டட கழிவுகளை மறுசுழற்சி செய்து, அதன் மூலம் புதிய பள்ளி கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக, கல் குவாரி நிர்வாகம் சார்பாக கூறப்பட்டது.

