/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆலத்துார் சிட்கோவில் போலீசார் ஆய்வு
/
ஆலத்துார் சிட்கோவில் போலீசார் ஆய்வு
ADDED : ஜூன் 12, 2025 11:07 PM
திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், பழைய மாமல்லபுரம் சாலையில், ஆலத்துார் ஊராட்சி உள்ளது. இங்குள்ள சிட்கோ தொழிற்பேட்டையில், 30க்கும் மேற்பட்ட தனியார் மருந்து தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் நேற்று, மாமல்லபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் மங்களப்பிரியா, உதவி ஆய்வாளர், நுண்ணறிவு பிரிவு போலீசார் உள்ளிட்ட குழுவினர், மெத்தனால் பயன்படுத்தும் மேற்கண்ட ஆலத்துார் சிட்கோவில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது, தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் மெத்தனால் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது.
'லேப்'களில் பயன்படுத்தும் போது, அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் வெளியே கொண்டு செல்கின்றனரா என கண்காணிக்கப்படுகிறதா, இருப்பு வைத்துள்ள விபரம், மெத்தனால் பயன்படுத்திய அளவு குறித்தும் ஆய்வு செய்தனர்.