/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிலாவட்டம் நகர் பகுதியில் சாலை அமைக்க கோரிக்கை
/
சிலாவட்டம் நகர் பகுதியில் சாலை அமைக்க கோரிக்கை
ADDED : ஜன 26, 2024 12:05 AM
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட கலைஞர் நகர் குடியிருப்பு பகுதி, சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில், மாரியம்மன் கோவில் தெரு மட்டும் உயரமான பகுதியாக உள்ளது. மற்ற 6 குறுக்கு தெருக்களில், 10 ஆண்டுகளுக்கு முன், சிமென்ட் சாலை அமைத்து சீரமைக்கப்பட்டது.
தற்போது, இந்த சாலைகள் மிகவும் பள்ளமான பகுதியில் உள்ளதால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதனால், அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. மேலும், மழைநீர் கால்வாய்கள் துார் வாரப்படாமல் உள்ளதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
எனவே, ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள், இப்பகுதியை ஆய்வு செய்து, பள்ளமாக உள்ள தெருப் பகுதிகளை உயர்த்தி, சிமென்ட் சாலை அமைக்க வேண்டும் என, குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

