/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏரி ஓரம் ராட்சத பேனர் அகற்ற வேண்டுகோள்
/
ஏரி ஓரம் ராட்சத பேனர் அகற்ற வேண்டுகோள்
ADDED : ஜூன் 20, 2025 11:32 PM

வண்டலுார்:வண்டலுார், தாங்கல் ஏரி ஓரத்தில் வைக்கப்பட்டுள்ள, பல டன் எடையிலான ராட்சத பேனரை அகற்ற வேண்டுமென, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சி, வாலாஜாபாத் சாலையோரம், 8 ஏக்கர் பரப்பில், தாங்கல் ஏரி உள்ளது.
இந்த ஏரியோரம், பல டன் எடையுள்ள இரும்பு சட்டங்கள் கொண்டு, ராட்சத பேனர் வைக்கப்பட்டு உள்ளது.
காற்று பலமாக வீசும் போதும், கன மழை நேரத்திலும், இந்த பேனர் சரிந்து கீழே விழுந்து, விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இதுபோன்ற ராட்சத பேனர்கள் கீழே விழுந்து, தமிழகத்தில் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
எனவே, அசம்பாவிதம் நடக்கும் முன், இந்த ராட்சத பேனரை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.