/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கீழக்கரணையில் நடைமேம்பாலம் அமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
/
கீழக்கரணையில் நடைமேம்பாலம் அமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
கீழக்கரணையில் நடைமேம்பாலம் அமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
கீழக்கரணையில் நடைமேம்பாலம் அமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
ADDED : மே 19, 2025 02:16 AM

மறைமலைநகர்:மறைமலைநகர் நகராட்சி கீழக்கரணை பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்டவற்றில், 10,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் ஜி.எஸ்.டி., சாலையில், கீழக்கரணை பகுதியில் சாலையைக் கடந்து தாம்பரம், செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த பகுதியில் நடை மேம்பாலம் இல்லாததால், பாதசாரிகள் சாலையைக் கடக்கும் போது விபத்தில் சிக்கி, அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, நடைமேம்பாலம் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
மூன்று ஆண்டுகளுக்கு முன், இச்சாலை எட்டுவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது முதல், சாலையைக் கடக்கும் முதியோர், பெண்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி, உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், இந்த பகுதியில் நடை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.