/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடப்பாக்கத்தில் தைப்பூசம் தெப்ப திருவிழா விமரிசை
/
கடப்பாக்கத்தில் தைப்பூசம் தெப்ப திருவிழா விமரிசை
ADDED : ஜன 27, 2024 12:11 AM

செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் கிராமத்தில், விசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது.
ஆண்டுதோறும், தைப்பூச பெருவிழா விமரிசையாக நடப்பது வழக்கம். ஆனால், அறங்காவலர் குழு இல்லாததால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடக்கப்படவில்லை.
ஆனால், இந்த ஆண்டு தைப்பூச தெப்ப திருவிழாவை விமரிசையாக நடத்த, கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகம் முடிவு செய்து.
நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு, விநாயகர் வழிபாடு செய்யப்பட்டது. மாலை 3:00 மணிக்கு மஹா அபிஷேகம் நடந்தது.
முக்கிய நிகழ்வான தெப்ப திருவிழா, இரவு 9:15 மணிக்கு துவங்கியது. கோவில் எதிரே உள்ள குளத்தில் தெப்பம் கட்டப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் காசிவிஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி சுவாமியர், மூன்று முறை வலம் வந்தனர்.
கடப்பாக்கம் மற்றும் அதன் சுற்ற வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

