/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரத்தினமங்கலத்தில் சாலை திறப்பு
/
ரத்தினமங்கலத்தில் சாலை திறப்பு
ADDED : ஜன 17, 2024 07:24 AM

கூடுவாஞ்சேரி : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வேங்கடமங்கலம் ஊராட்சி, ரத்தினமங்கலம் கிராமத்தில் நந்தனார் கோவில் தெருவில், மழை காலங்களில் தண்ணீர் தேங்கியதால், சாலை முற்றிலும் சேதமடைந்தது.
இதனால் அப்பகுதியினர் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர் அவதிப்பட்டு வந்தனர். சாலையை சீரமைத்து, புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் செங்கல்பட்டு மாவட்ட அ.தி.மு.க., கவுன்சிலர் கஜேந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதன்படி, மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து, 6 லட்சம் ரூபாய் மற்றும் அவரது சொந்த பணத்தில் இருந்து, 5  லட்சம் ரூபாய் என, 11 லட்சத்தில் சேதமான சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்தன.
புதிதாக அமைக்கப்பட்ட இச்சாலையை, நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு கவுன்சிலர் கஜேந்திரன் திறந்து வைத்தார்.

