/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செம்பரம்பாக்கம் - பூண்டி ஏரிகள் கால்வாய் ரூ.19 கோடியில் புனரமைக்க நடவடிக்கை

ADDED : பிப் 29, 2024 11:12 PM
சென்னை:செம்பரம்பாக்கம் ஏரி - பூண்டி ஏரி இடையிலான இணைப்பு கால்வாயை, 19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்க நீர்வளத்துறை ஏற்பாடுகளை துவங்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி மற்றும் சோழவரம் ஏரிகளில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லை. எனவே, இந்த ஏரிகளில் தேங்கும் நீர், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு கால்வாய் வாயிலாக அனுப்பப்படுகிறது. பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீரை வெளியேற்றுவதற்காக, 21 கி.மீ.,க்கு இணைப்பு கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் வீசிய மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அரண்வாயல், மேவளூர் குப்பம், தண்டலம் உட்பட பல்வேறு இடங்களில் கால்வாயின் கரைகளில் சிலாப்புகள் சரிந்துள்ளன.
கோரை புற்கள், வேலிகாத்தான், புதர்கள் மண்டி கிடக்கிறது. இதனால், கால்வாயில் வெறியேற்றப்படும் நீர் வீணாகி வருகிறது.
எனவே, கோடைக்காலத்தில் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீரை கொண்டுவருவதற்கு, இந்த கால்வாயை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக 19 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புனரமைப்பு பணிகள் துவங்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் நீர்வளத்துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.