/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டில் குப்பையில் கிடக்கும் சிக்னல் விளக்குகள்
/
செங்கல்பட்டில் குப்பையில் கிடக்கும் சிக்னல் விளக்குகள்
செங்கல்பட்டில் குப்பையில் கிடக்கும் சிக்னல் விளக்குகள்
செங்கல்பட்டில் குப்பையில் கிடக்கும் சிக்னல் விளக்குகள்
ADDED : ஜன 27, 2024 12:09 AM

செங்கல்பட்டு:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையின் பல முக்கிய சந்திப்புகளில், சிக்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு புலிப்பாக்கம் சந்திப்பில், நெடுஞ்சாலை துறை சார்பில் சிக்னல் அமைக்கப்பட்டு, வாகனங்கள் செங்கல்பட்டு நகருக்குள் செல்ல வழி செய்யப்பட்டு இருந்தது.
ஆனால், சில மாதங்களுக்கு முன், சாலை அமைக்கும் பணியின் போது சிக்னல் விளக்குகள் கம்பத்துடன் அகற்றப்பட்டன.
அப்போது அகற்றப்பட்ட இரும்பு கம்பம், தற்போது நெடுஞ்சாலையின் அருகில் குப்பையோடு குப்பையாக வீணாகி வருகிறது.
இதில் உள்ள விளக்குகளை பழுது நீக்கி, மாற்று இடத்தில் பயன்படுத்த வேண்டிய இரும்பு கம்பம், அதிகாரிகள் அலட்சியத்தால் வீணாகி வருவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

