sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கோவளம் - மாமல்லை தடத்தில் மூன்று நாட்கள் போக்குவரத்து தடை

/

கோவளம் - மாமல்லை தடத்தில் மூன்று நாட்கள் போக்குவரத்து தடை

கோவளம் - மாமல்லை தடத்தில் மூன்று நாட்கள் போக்குவரத்து தடை

கோவளம் - மாமல்லை தடத்தில் மூன்று நாட்கள் போக்குவரத்து தடை


ADDED : ஜன 26, 2024 12:22 AM

Google News

ADDED : ஜன 26, 2024 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:'கேலோ இந்தியா' சைக்கிளிங் போட்டிக்காக, கோவளம் - மாமல்லபுரம் தடத்தில், இன்று முதல் நாளை மறுநாள் வரை, பகலில் ஆறு மணி நேரம் போக்குவரத்து தடை செய்யப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து, மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி., ஜெகதீஸ்வரன் கூறியதாவது:

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு சைக்கிளிங் போட்டி, நாளை மற்றும் நாளை மறுநாள், கோவளம் - மாமல்லபுரம் இடையே, கிழக்கு கடற்கரை சாலையில் நடக்கிறது. இன்று அதற்கான ஒத்திகை நடக்கிறது.

எனவே, கோவளம் - மாமல்லபுரம் தடத்தில் மட்டும், மூன்று நாட்களும், காலை 6 மணி முதல், பகல் 12 மணி வரை, வாகன போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

மாமல்லபுரம் - சென்னை தடத்தில் மட்டும், வாகனங்கள் வழக்கம்போல் செல்லலாம். சென்னையிலிருந்து வரும் வாகனங்கள், கோவளத்திலிருந்து கேளம்பாக்கம் வழியாக பழைய மாமல்லபுரம் சாலை வழியே செல்லலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us