/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
துறைமுக அதிகாரி அறிக்கை அளிக்க தீர்ப்பாயம் உத்தரவு
/
துறைமுக அதிகாரி அறிக்கை அளிக்க தீர்ப்பாயம் உத்தரவு
துறைமுக அதிகாரி அறிக்கை அளிக்க தீர்ப்பாயம் உத்தரவு
துறைமுக அதிகாரி அறிக்கை அளிக்க தீர்ப்பாயம் உத்தரவு
ADDED : ஜன 10, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:எண்ணுார் கோரமண்டல் உர ஆலையில், அமோனியா வாயு கசிவு தொடர்பான வழக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாசு கட்டுப்பாட்டு வாரிய வழக்கறிஞர் அவகாசம் கோரினார்.
தொடர்ந்து, தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், 'இந்த வழக்கில் துறைமுக பாதுகாப்பு தலைமை இன்ஸ்பெக்டரும் சேர்க்கப்படுகிறார்.
'அமோனியா வாயு கசிவு குறித்து, துறைமுக பாதுகாப்பு தலைமை இன்ஸ்பெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை, வரும் பிப்., 6ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.