/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகத்தில் டீசல் பதுக்கிய இருவர் கைது
/
மதுராந்தகத்தில் டீசல் பதுக்கிய இருவர் கைது
ADDED : பிப் 01, 2024 10:42 PM
மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே சென்னை - - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள பழைய இரும்பு கடைகளில், கள்ளத்தனமாக விற்பனைக்கு டீசல் பதுக்கி வைத்திருந்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.
மதுராந்தகம் அடுத்த கள்ளபிரான்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ், 37. கள்ளபிரான்புரம் பகுதியில், பழைய இரும்புக்கடை நடத்தி வருகிறார்.
அதேபோல், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி, 38. இவர் பாக்கம் பேருந்து நிலையம் அருகே பழைய இரும்புக்கடை நடத்தி வருகிறார்.
இருவரும், டீசலை கடையில் பதுக்கி வைத்து, இரவு நேரங்களில் கள்ள மார்க்கெட்டில் விற்று வந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த மதுராந்தகம் போலீசார், இரண்டு கடைகளிலும் சோதனை செய்தனர்.
பதுக்கி வைத்திருந்த டீசலை பறிமுதல் செய்த போலீசார், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

