/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேதகிரீஸ்வரர் தெப்போற்சவம் திருக்கழுக்குன்றத்தில் விமரிசை
/
வேதகிரீஸ்வரர் தெப்போற்சவம் திருக்கழுக்குன்றத்தில் விமரிசை
வேதகிரீஸ்வரர் தெப்போற்சவம் திருக்கழுக்குன்றத்தில் விமரிசை
வேதகிரீஸ்வரர் தெப்போற்சவம் திருக்கழுக்குன்றத்தில் விமரிசை
ADDED : ஜன 28, 2024 04:06 AM

திருக்கழுக்குன்றம்: ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது.
வேதமலைக்குன்றின் உச்சி பகுதியில், வேதகிரீஸ்வரர் சுயம்புவாக தோன்றி, கோவில் கொண்டுள்ளார்.
இங்கு, தைப்பூச உற்சவத்தின்போது சங்குதீர்த்த குளம், ரிஷப தீர்த்தகுளம் ஆகியவற்றில், வேதகிரீஸ்வரர் தெப்போற்சவம் காண்பார்.
தைப்பூச உற்சவ நாளான, ஜன., 25ம் தேதி, சுவாமி, திரிபுரசுந்தரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அன்றிரவு, சங்குதீர்த்த குளத்தில், அலங்கார தெப்பத்தில் உலா சென்றனர். நேற்று முன்தினம், அபிஷேக வழிபாடு நடந்தது. இரவு ரிஷப தீர்த்தகுளத்தில் தெப்போற்சவம் நடைபெற்றது. திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமியை தரிசித்து வழிபட்டனர்.