/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பவுஞ்சூர் பஜார் வீதி சாலை விரிவாக்கம் செய்யப்படுமா?
/
பவுஞ்சூர் பஜார் வீதி சாலை விரிவாக்கம் செய்யப்படுமா?
பவுஞ்சூர் பஜார் வீதி சாலை விரிவாக்கம் செய்யப்படுமா?
பவுஞ்சூர் பஜார் வீதி சாலை விரிவாக்கம் செய்யப்படுமா?
ADDED : செப் 28, 2025 11:51 PM
பவுஞ்சூர்:பவுஞ்சூர் பஜார் வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பவுஞ்சூர் ஊராட்சியில், மதுராந்தகத்தில் இருந்து கூவத்துார் செல்லும் மாநில நெடுஞ்சாலையில், பஜார் வீதி உள்ளது.
இங்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகள், காவல் நிலையம், வட்டார வளர்ச்சி அலுவலகம், வேளாண்மைத் துறை அலுவலகம், அஞ்சலகம், பேருந்து நிறுத்தம், அரசு மருத்துவமனை, சந்தை, வங்கிகள் உள்ளிட்டவை செயல்படுகின்றன.
மேலும், ஏராளமான கடைகளும் உள்ளதால், பவுஞ்சூர் பஜாருக்கு தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
தற்போது பஜார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலை 11 அடி அகலம் மட்டுமே உள்ளதால் கார், வேன், பேருந்து, லாரி ஆகியவை சென்று வர சிரமமாக உள்ளது. முன்னால் செல்லும் வாகனங்களை மற்ற வாகனங்கள் முந்த முயற்சிக்கும் போது, விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
மேலும், பஜார் வீதிக்கு வரும் மக்களும் தங்களது இருசக்கர வாகனங்களை, சாலையில் தாறுமாறாக நிறுத்துவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரத்தில், பஜார் பகுதியில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, இந்த சாலையை விரிவாக்கம் செய்ய, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

