/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உலக சுற்றுச்சூழல் தினம் கேளம்பாக்கத்தில் விழிப்புணர்வு
/
உலக சுற்றுச்சூழல் தினம் கேளம்பாக்கத்தில் விழிப்புணர்வு
உலக சுற்றுச்சூழல் தினம் கேளம்பாக்கத்தில் விழிப்புணர்வு
உலக சுற்றுச்சூழல் தினம் கேளம்பாக்கத்தில் விழிப்புணர்வு
ADDED : ஜூன் 05, 2025 08:55 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கேளம்பாக்கம் ஊராட்சி தலைவர் ராணி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
பிளான் பவுண்டேஷன் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள், பள்ளி மாணவர்களிடையே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல், காற்று மாசு தடுத்தல் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தி வரும் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அரசு பள்ளிகளுக்கு நினைவு பரிசு வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது.
கேளம்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த துாய்மை பணியாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.