ADDED : மார் 22, 2025 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர், கேளம்பாக்கம் அடுத்த தாழம்பூர் காவல் எல்லையில் வேங்கடமங்கலம் பகுதி உள்ளது.
இப்பகுதியில் நேற்று முன்தினம் தாழம்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தைலந்தோப்பு அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில், கையில் பையுடன் சென்ற நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். பையை சோதனையிட்டபோது, அதில், 1 கிலோ 166 கிராம் கஞ்சா இருப்பது தெரிந்தது. விசாரணையில், அந்நபர் அகரம்தென் பகுதியை சேர்ந்த பாலகணேஷ். 33 என்பது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.