/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமியை கர்ப்பமாக்கிய 2 குழந்தைகளின் தந்தை
/
சிறுமியை கர்ப்பமாக்கிய 2 குழந்தைகளின் தந்தை
ADDED : ஜூலை 16, 2024 12:13 AM
தண்டையார்பேட்டை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த 11ம் தேதி மாயமானார். இது குறித்து, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்தனர்.
இந்த நிலையில், நேற்று சிறுமி காவல் நிலையம்வந்தார். பின் சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், 35, என்பவரை, சிறுமி இரு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். வெங்கடேசனுக்கு ஏற்கனவே திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். சிறுமியின் காதல் தெரியவரவே, அவரது மனைவி பிரிந்து சென்றுள்ளார்.
இந்நிலையில், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, வெங்கடேசன் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததால், சிறுமி மூன்று மாதம் கர்ப்பமானது தெரிய வந்தது.
இதையடுத்து, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து வெங்கடேசனை தேடி வருகின்றனர்.