/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வையாவூர் குடிநீரில் பாக்டீரியா தொற்று
/
வையாவூர் குடிநீரில் பாக்டீரியா தொற்று
ADDED : ஜூன் 20, 2024 12:47 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட வையாவூரில், வயிற்றுப் போக்கால் இரண்டு பேர் இறந்தனர். 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வக பரிசோதனையில், குடிநீரில் பாக்டீரியா தொற்று இருந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலர் த.ரா.செந்தில் கூறியதாவது:
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வையாவூரைச் சேர்ந்த அனைவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர். இரு நாட்களாக வையாவூரில் யாருக்கும் வயிற்றுப்போக்கு, வாந்தி என, எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. வையாவூரில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
வையாவூரில் சப்ளையான குடிநீரில் 'காலிஃபார்ம்' என்ற பாக்டீரியா தொற்று இருந்தது தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.