/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செம்மஞ்சேரியில் 10 ஏக்கர் நிலத்தில் 'பாஷ்யம்' அடுக்குமாடி குடியிருப்பு
/
செம்மஞ்சேரியில் 10 ஏக்கர் நிலத்தில் 'பாஷ்யம்' அடுக்குமாடி குடியிருப்பு
செம்மஞ்சேரியில் 10 ஏக்கர் நிலத்தில் 'பாஷ்யம்' அடுக்குமாடி குடியிருப்பு
செம்மஞ்சேரியில் 10 ஏக்கர் நிலத்தில் 'பாஷ்யம்' அடுக்குமாடி குடியிருப்பு
ADDED : ஜூன் 04, 2024 12:18 AM

சென்னை,
சென்னை சோழிங்கநல்லுார் அடுத்த செம்மஞ்சேரியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டத்துக்காக பாஷ்யம் நிறுவனம், 10 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது.
சென்னையில் பல்வேறு இடங்களில் அதிக தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இதில், காசா கிராண்ட், அப்பாசாமி குழுமம், வி.ஜி.என்., போன்ற நிறுவனங்கள் புதிய திட்டங்களை தொடர்ந்து அறிவித்து வருகின்றன.
இதற்காக தனியாரிடம் இருந்து நிலங்களை கூட்டு ஒப்பந்தம் முறையிலும், கிரையமாகவும் இந்நிறுவனங்கள் வாங்குகின்றன.
இந்த வகையில் 'பாஷ்யம் குழுமம்' நிறுவனம் சார்பில், பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக, அலுவலக வளாகங்கள் கட்டப்படுகின்றன. இதில் கோயம்பேடில், மிகப்பெரிய அளவில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை இந்நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
இதை தொடர்ந்து, கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கத்தில் பிரார்த்தனா தியேட்டர் செயல்பட்டு வந்த, 25 ஏக்கர் நிலத்தை பாஷ்யம் நிறுவனம் பெற்றுள்ளது. இங்கு மால் மற்றும் குடியிருப்பு வளாகம் கட்டுவதற்கான பணிகளை இந்நிறுவனம் துவக்கி உள்ளது.
இந்த வகையில், சோழிங்கநல்லுார் அடுத்த செம்மஞ்சேரியில், தனியார் ஒருவரிடம் இருந்து 10 ஏக்கர் நிலத்தை பாஷ்யம் நிறுவனம் வாங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்த நிலத்தின் மதிப்பு, 250 கோடி ரூபாய்.
இங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட பாஷ்யம் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் துவங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்கள் வருகையை கருத்தில் வைத்து, பாஷ்யம் உள்ளிட்ட நிறுவனங்கள் இங்கு புதிய திட்டங்களை செயல்படுத்த ஆர்வம் காட்டுகின்றன என, கட்டுமான துறையினர் தெரிவித்தனர்.