/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீர் இணைப்பு பெற அழைப்பு மடிப்பாக்கத்தில் நாளை முகாம்
/
குடிநீர் இணைப்பு பெற அழைப்பு மடிப்பாக்கத்தில் நாளை முகாம்
குடிநீர் இணைப்பு பெற அழைப்பு மடிப்பாக்கத்தில் நாளை முகாம்
குடிநீர் இணைப்பு பெற அழைப்பு மடிப்பாக்கத்தில் நாளை முகாம்
ADDED : ஜூன் 07, 2024 12:12 AM
மடிப்பாக்கம், பெருங்குடி மண்டலம், 188வது வார்டுக்கு உட்பட்ட மடிப்பாக்கம் பகுதியில், ஒருங்கிணைந்த குடிநீர் வழங்கல் திட்டப் பணி நிறைவடைந்து உள்ளது.
இதையடுத்து, ராஜலட்சுமி நகர், ராஜராஜேஸ்வரி நகர், மகாலட்சுமி நகர், டாக்டர் ராமமூர்த்தி நகர், பெரியார் நகர், கோவிந்தசாமி நகர், அண்ணா நகர், செந்தில் நகர் ஆகிய பகுதிகளில் சோதனை வெள்ளோட்டம் முடிந்துள்ளது. இதையடுத்து, வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடக்க உள்ளது.
இதன் காரணமாக, குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாம் மடிப்பாக்கம், ராஜலட்சுமி நகர், மாநகராட்சி பூங்கா அருகில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தில், நாளை காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்க உள்ளது.
முகாமிற்கு வருவோர், தங்கள் கட்டடத்திற்கு வரி மதிப்பீடு செய்யப்பட்ட உத்தரவு நகல், குடிநீர் வாரியத்திற்கு தற்போது வரையிலான குடிநீர் கட்டணம், வரி செலுத்திய ரசீது, ஏற்கனவே, ஊராட்சி காலத்தில் பி.வி.சி., குழாய் வாயிலாக குடிநீர் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர், வைப்புத்தொகை செலுத்திய அசல் ரசீது ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து, குடிநீர் குழாய் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம்.
குடிநீர் இணைப்பு பெற வெளியாட்களை அணுக வேண்டாம். தகவல்களுக்கு உதவிப் பொறியாளர் 81449 30528 என்ற மொபைல் எண்ணிலும், https://cmwssb.tn.gov.in/new-sewer-connection என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளலாம் என, குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.