ADDED : ஜூலை 25, 2024 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லுாரை சேர்ந்தவர் வைரமணி 25. சென்னையில் ரவுடியாக உள்ளார். இதனால், அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சமீபத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுதும் ரவுடிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சென்னை ரவுடி வைரமணி, சொந்த ஊரில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வீரவநல்லுாரில் அவரை போலீசார் கைது செய்தனர்.