/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'லாலிபாப்' கேட்டு சிக்கன் கடைக்காரர் மண்டை உடைப்பு
/
'லாலிபாப்' கேட்டு சிக்கன் கடைக்காரர் மண்டை உடைப்பு
'லாலிபாப்' கேட்டு சிக்கன் கடைக்காரர் மண்டை உடைப்பு
'லாலிபாப்' கேட்டு சிக்கன் கடைக்காரர் மண்டை உடைப்பு
ADDED : ஜூலை 21, 2024 01:17 AM
வியாசர்பாடி,:கொடுங்கையூர், எம்.ஆர்.நகர் விநாயகர் தெருவைச் சேர்ந்தவர் உசேன், 54. இவர், வியாசர்பாடி, கள்ளுக்கடை சந்திப்பு அருகில் உள்ள சிக்கன் கடையில் வேலை செய்து வருகிறார்.
இவரது கடைக்கு நேற்று வந்த வாலிபர்கள் மூன்று பேர், 'லாலிபாப்' கேட்டுள்ளனர். கடை ஊழியர் 70 ரூபாய் எனக்கூற, '50 ரூபாய் உள்ளது; 20 ரூபாய் பிறகு தருகிறோம்' என தெரிவித்தனர். கடை ஊழியர் உசேன், நான்கு லாலிபாப் கறி துண்டுகளை எடுத்து எண்ணெயில் வறுப்பதற்காக போட்டுள்ளார். திடீரென வாலிபர்களில் ஒருவர், ஒரு கறி துண்டு எடுத்து எண்ணெயில் போட்டுள்ளார்.
இதை கடை ஊழியர் உசேன் கேட்ட போது, ஆத்திரமடைந்த நபர் அருகில் இருந்த கரண்டியால், உசேனின் தலையில் பலமாக அடித்தார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த உசேனை, அங்கிருந்தோர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
வியாசர்பாடி போலீசாரின் விசாரணையில், வியாசர்பாடி, சி.கல்யாணபுரத்தை சேர்ந்த பழைய குற்றவாளியான, வேங்கையன், 23, என்பவரை நேற்று கைது செய்தனர்.