/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெரிய மீன்கள் வரத்து குறைவால் விற்பனை தொடர்ந்து மந்தம் ஏமாற்றத்துடன் திரும்பிய மீன் பிரியர்கள்

ADDED : ஜூலை 15, 2024 01:55 AM

காசிமேடு:மீன்பிடி தடைக்காலம் முடிந்து, 5வது ஞாயிற்றுக்கிழமை என்பதால், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடிக்க சென்ற 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று கரை திரும்பின.
மீன் பிரியர்கள் மற்றும் வியாபாரிகளும் காசிமேடில் குவிந்தனர்.
இதனால், நேற்று அதிகாலை 3:00 மணி முதல் விடிய விடிய காசிமேடு களைகட்டியது.
ஆனால், கடந்த வாரங்களை போல, சங்கரா, வாளை, தும்பிலி, நெத்திலி, நவரை உள்ளிட்ட சிறிய மீன்களின் வரத்து தான், இந்த வாரமும் இருந்தது.
வஞ்சிரம், பாறை, கொடுவா, பர்லா உள்ளிட்ட பெரிய மீன்கள் வரத்து மிகக் குறைந்த அளவில் காணப்பட்டது.
இதனால், பெரிய மீன்களின் வரத்திற்காக காத்திருந்த மீன் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சிலர் வேறு வழியின்றி, சிறிய ரக மீன்களை வாங்கி சென்றனர். வியாபாரமும் மந்தமாக இருந்தது. இதனால், வியாபாரிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
இது குறித்து விசைபடகு உரிமையாளர் கூறுகையில், ''கடந்த 50 ஆண்டு கால மீன்பிடி தொழிலில், இது மிகவும் மோசமான ஆண்டாக உள்ளது.
தற்போது கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மீன்பிடி தடைக்காலம் உள்ளது. இந்த காலங்களில், 1,000 ரூபாய் விற்பனையாகும் மீன்கள், 3,000 ரூபாய்க்கு விற்பனையாகி மும்மடங்கு லாபம் கிடைக்கும். ஆனால், தற்போது 500 ரூபாய் கூட கிடைக்கவில்லை.
டீசல், ஐஸ் என, 8 லட்ச ரூபாய் செலவு செய்து கடலுக்குள் சென்று வருகிறோம். ஆனால், சென்று வரும் தொகைக்கு கூட மீன்கள் விற்பனையாவதில்லை.
என் படகில் நெத்திலி கூடை, கூடையாக வைத்திருந்தும் வாங்க ஆளில்லை. மீன்களை ஓரிரு நாள் வைத்து விற்பனை செய்யும் நிலையே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.