/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடிகால் பணி 'காஸ்' கசிவால் தீ விபத்து
/
வடிகால் பணி 'காஸ்' கசிவால் தீ விபத்து
ADDED : ஜூலை 14, 2024 12:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்,திருப்போரூர் அடுத்த படூர் ஊராட்சியில் உள்ள ஓ.எம்.ஆர்., சாலையில், தனியார் மருத்துவமனை எதிரே நெடுஞ்சாலைத் துறை சார்பில், மழைநீர் வடிகால் பணிகள் நடக்கின்றன.
நேற்று மதியம் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் கால்வாய் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது, எதிர்பாராத விதமாக புதை 'காஸ்' குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டு மிகுந்த சத்தத்துடன் வெடித்தது. இதில், அருகில் இருந்த டீ கடையில் தீ பரவியது.
கடையின் ஒரு பகுதி தீக்கிரையானது. சிறுசேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகே உள்ள உணவகங்களில் காஸ் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.