/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திடீர் காற்று, மழையால் விமான சேவை பாதிப்பு
/
திடீர் காற்று, மழையால் விமான சேவை பாதிப்பு
ADDED : ஜூன் 05, 2024 12:33 AM

சென்னை, சென்னை, புறநகர் பகுதிகளில் நேற்று மாலை திடீரென சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், சென்னையில் தரை இறங்க வேண்டிய 7 விமானங்கள், பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.
நேற்று மாலை 5:00 மணிக்கு கோவையில் இருந்து சென்னைக்கு வரும் இண்டிகோ விமானம், டில்லியில் இருந்து சென்னைக்கு 5:15 மணிக்கு வரும் இண்டிகோ விமானம், மும்பையில் இருந்து சென்னைக்கு 5:25 மணிக்கு வரும் ஏர் இந்தியா விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.
இதேபோல், தரை இறங்க முடியாமல் இருந்த பெங்களூரு, மும்பை, மதுரை உள்ளிட்ட விமானங்களும், பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.
மேலும், டில்லி, ஹைதராபாத், மும்பை உட்பட 14 நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள், தாமதமாக புறப்பட்டு சென்றன. நேற்று மாலை பெய்த மழையால், வருகை மற்றும் புறப்பாடு என, 21 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.