/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மனைவியின் உடலில் சூடுபோட்ட கணவர் கைது
/
மனைவியின் உடலில் சூடுபோட்ட கணவர் கைது
ADDED : ஜூலை 28, 2024 01:43 AM
சென்னை:புரசைவாக்கம், குழந்தை வேலு தெருவைச் சேர்ந்தவர் நாசியா, 32. இவர்,ஓட்டேரியைச் சேர்ந்த காலித், 32, என்பவரை ஆறு ஆண்டுகளாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன்2019ம் ஆண்டு திருமணம்செய்து கொண்டார்; குழந்தை இல்லை.
போதைப் பழக்கத்திற்கு அடிமையான காலித்திற்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. அதேநேரம், மனைவி மீதும் சந்தேகம் இருந்துள்ளது. இதனால், தினசரிதகராறில் ஈடுபட்டுவந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், 26ம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின், நாசியா அவரது உறவுக்கார பெண் ஹெர்ஷினியுடன் உறங்கச் சென்றார்.
நேற்று முன்தினம் அதிகாலை ஹெர்ஷினி கழிப்பறைக்கு சென்றுள்ளார். அந்நேரம், இஸ்திரி பெட்டியை சூடேற்றி உறங்கி கொண்டிருந்த மனைவி யின் உடலில், ஆறு இடங்களில் காலித் சூடுபோட்டுள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர்அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரிடம் மாஜிஸ்திரேட் தாமோதரன் மற்றும்போலீசார் விசாரித்தனர்.இந்த நிலையில், நேற்று வேப்பேரி போலீசாரால் காலித் கைது செய்யப் பட்டார்.