/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வர்த்தக மையத்தில் தொழில்துறை கண்காட்சி சிறு, குறு நிறுவனங்களுக்கான வரப்பிரசாதம்
/
வர்த்தக மையத்தில் தொழில்துறை கண்காட்சி சிறு, குறு நிறுவனங்களுக்கான வரப்பிரசாதம்
வர்த்தக மையத்தில் தொழில்துறை கண்காட்சி சிறு, குறு நிறுவனங்களுக்கான வரப்பிரசாதம்
வர்த்தக மையத்தில் தொழில்துறை கண்காட்சி சிறு, குறு நிறுவனங்களுக்கான வரப்பிரசாதம்
ADDED : ஜூன் 01, 2024 12:29 AM

சென்னை, 'லாஜிஸ்டிக், பேக்கேஜிங்' உள்ளிட்ட பல பிரிவுகள் தொடர்புடைய மூன்று நாள் தொழில்துறை கண்காட்சி, சென்னை வர்த்தக மையத்தில் நேற்று துவங்கியது.
இளம் தலைமுறையினர் தொழில் துறையில் முன்னேறும் வகையில், ஸ்மார்ட் எக்ஸ்போஸ் அண்டு பேர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கண்காட்சிகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில், 'லாக்மேட்' என்ற, 'லாஜிஸ்டிக் மெட்டிரியல் ஹாண்டிலிங்' ஒன்பதாம் ஆண்டு கண்காட்சியும், அனைத்து வகையான, 'பேக்கிங்'களை,'காம்பேக்' எனும் பெயரில், 12ம் ஆண்டு கண்காட்சியும் சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் மூன்று நாள் நடத்துகிறது.
ஸ்மார்ட் எக்ஸ்போ நிறுவன தலைமை செயல் அதிகாரி சுவாமிநாதன் கூறியதாவது:
சரக்குகளை கையாளும் உபரணங்கள், அதன் உதிரிபாகங்கள் தயாரிக்கும், 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சார்பில்,'லாக்மேட்' எனும் பெயரில் கண்காட்சி நடத்தப்படுகிறது.
இதில் மிஷின், மெட்டிரியல் ஹாண்ட்லிங், ஆட்டோமேஷன் மற்றும் லாஜிஸ்டிக் உள்ளிட்ட சகலமான விஷயங்களும் உள்ளன. அடுத்ததாக,'காம்பேக்' எனும் பெயரிலான கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில், முழுக்க முழுக்க அனைத்து வகையான பேக்கேஜிங் இயந்திரங்கள், பொருட்கள், அமைப்புகள், காருகேஷன், பிரின்டிங், லேபிளிங் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இதிலும், 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
இதில், நாடு முழுதும் இருந்து, பல்வேறு நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. நாளை வரை நடக்கும் இந்த கண்காட்சியில், 12,000 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினர் பங்கேற்பர் என, எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.