/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டேபிள் டென்னிஸ் தரவரிசை அரையிறுதியில் நந்தினி
/
டேபிள் டென்னிஸ் தரவரிசை அரையிறுதியில் நந்தினி
ADDED : ஜூலை 29, 2024 01:38 AM
சென்னை:சென்னை, ஐ.சி.எப்., உள் விளையாட்டு அரங்கில், மாநில தரவரிசைக்கான டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடந்தன.
அதில், 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவிற்கான இறுதி போட்டியில், சென்னை அனன்யா, தேனி பூஜாஸ்ரீயையும், சென்னை வார்னிகா, அம்ரிதாவையும் வீழ்த்தினர்.
மதுரை புவனிதா, சென்னை மோக் ஷாவை வீழ்த்தினார். சென்னை வாமிகா, அனன்யாவை வீழ்த்தினார்.
வயது 17க்கு உட்பட்ட ஆண்களுக்கான காலிறுதியில், சென்னை அபிநந்த், ஸ்ரீராமையும், தேஜாஸ்ரம், பூஷனையும் வீழ்த்தினர். பெண்கள் அணியில், அனன்யா, சம்யுக்தாவையும், ஷர்வானி, பூஜாவையும், நந்தினி, தர்ஷினியையும் வீழ்த்தினர்.
அதேபோல், பெண்கள் பிரிவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான காலிறுதியில் நந்தினி, ஷர்வானியையும், ஏகாந்திகா, யோகஸ்ரீயையும் வென்றனர். அதேபோல் நளினா அம்ருதா, அனன்யாவையும், ஷ்ரியா, பூஜாவையும் வீழ்த்தினர்.