sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

முதியோர் மருத்துவமனையில் இயற்கை சிகிச்சை மையம்

/

முதியோர் மருத்துவமனையில் இயற்கை சிகிச்சை மையம்

முதியோர் மருத்துவமனையில் இயற்கை சிகிச்சை மையம்

முதியோர் மருத்துவமனையில் இயற்கை சிகிச்சை மையம்


ADDED : ஜூன் 12, 2024 12:14 AM

Google News

ADDED : ஜூன் 12, 2024 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, தேசிய முதியோர் நல மருத்துவமனையில், பக்கவிளைவுகள் இல்லாத யோகா - இயற்கை மருத்துவ சேவை துவங்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில், தேசிய முதியோர் நல மருத்துவமனை உள்ளது. கடந்த பிப்., மாதம் துவங்கப்பட்ட இம்மருத்துவமனையில், 200 படுக்கை வசதிகள், 40 தீவிர சிகிச்சை பிரிவு, 20 கட்டண படுக்கைகள் உள்ளன. மேலும், உணவு வசதியுடன் 900 கட்டண வார்டுகளும் உள்ளன.

இதில், 37,811 புறநோயாளிகள், 1,198 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். தீவிர பிரிவில் 985 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இங்கு, 220 அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இம்மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக, பக்கவிளைவில்லாத யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை முறையை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார்.

பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

அனைத்து வயதினரும் பயன்பெறக்கூடியது யோகா பயிற்சி. குறிப்பாக, முதியோருக்கு யோகா பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பக்கவிளைவுகள் இல்லாத இயற்கை மருத்துவ சிகிச்சை முறை இங்கு துவக்கப்பட்டுள்ளது.

இங்கு, உபவாச சிகிச்சை, யோகா, மசாஜ், நீராவிக்குளியல், வாழை இலை குளியல், மண் குளியல், காந்த சிகிச்சை, நிற சிகிச்சை, நீர் சிகிச்சை, இயற்கை உணவு சிகிச்சை, இயற்கை மூலிகை சிகிச்சை, அக்குபஞ்சர், அக்குபிரஷர், நறுமண சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனை போன்றவை உள்ளன.

உடலையும், உள் உறுப்புகளையும் வளம் பெற செய்வதற்கும், புத்துணர்ச்சி அடைய செய்வதற்கும் இதுபோன்ற சிகிச்சை முறைகள் ஏதுவாக இருக்கும். முதியோருக்கு கோபமும், பயமும் அதிகரிக்காமல் கட்டுப்படுத்த இப்பயிற்சிகள் பயனுள்ளதாக இருக்கும். முதியோர்களுக்கு ஏற்படும் தசை இறுக்கத்திற்கு, தளர்வடைய செய்யும் சிகிச்சை முறைகளும் வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us