/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரவுடியின் உயிருக்கு குறி? குழந்தைகளுடன் மனைவி தீக்குளிக்க முயற்சி
/
ரவுடியின் உயிருக்கு குறி? குழந்தைகளுடன் மனைவி தீக்குளிக்க முயற்சி
ரவுடியின் உயிருக்கு குறி? குழந்தைகளுடன் மனைவி தீக்குளிக்க முயற்சி
ரவுடியின் உயிருக்கு குறி? குழந்தைகளுடன் மனைவி தீக்குளிக்க முயற்சி
ADDED : ஜூலை 21, 2024 01:07 AM
வேப்பேரி:மேற்கு மாம்பலம், வண்டிக்காரன் தெருவைச் சேர்ந்தவர் ராகினி, 33. இவர் தன் குழந்தைகள் ஸ்ரீகுரு, 7, தேஜாஸ்ரீ, 1, ஆகியோருடன், வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று மதியம் வந்தார்.
மூன்றாம் நுழைவாயில் அருகே நின்று, 'தன் கணவரை தேனாம்பேட்டை போலீசார் விசாரணை என்ற பெயரில் மிகவும் துன்புறுத்தி வருகின்றனர். அவரை சிறையில் அடைக்க தொடர்ந்து முயற்சி நடக்கிறது' என குற்றம் சாட்டினார்.
பின், தன் கணவரின் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு, உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
இதை பார்த்த கமிஷனர் அலுவலக பாதுகாப்பு போலீசார், மூவரையும் மீட்டு குழந்தைகளை எழும்பூர் மருத்துவமனைக்கும், உடலில் காயமடைந்த ராகினியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து, வேப்பேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
ராகினியின் கணவர் சுந்தரமூர்த்தி, தேனாம்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி.