/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளிகளுக்கான மாநில ஹாக்கி லீக் சென்னை, திருவண்ணாமலை மோதல்
/
பள்ளிகளுக்கான மாநில ஹாக்கி லீக் சென்னை, திருவண்ணாமலை மோதல்
பள்ளிகளுக்கான மாநில ஹாக்கி லீக் சென்னை, திருவண்ணாமலை மோதல்
பள்ளிகளுக்கான மாநில ஹாக்கி லீக் சென்னை, திருவண்ணாமலை மோதல்
ADDED : ஜூலை 19, 2024 12:10 AM
சென்னை, தமிழகத்தில் ஹாக்கி விளையாட்டை மேம்படுத்த, பல நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது.
அதன்படி, பள்ளி மாணவர்களிடையே ஹாக்கியை பிரபலப்படுத்தவும், திறமையான இளம் வீரர்களை அடையாளம் கண்டு கூடுதல் பயிற்சி அளிக்கவும், கடந்த 6, 7ம் தேதிகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில், மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பள்ளி ஹாக்கி லீக்கில், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில், 81 அரசு பள்ளிகள் உட்பட 306 அணிகள் பங்கேற்றன. இதில், 24 அரசு பள்ளிகள் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்து அசத்தின.
தொடர்ந்து, மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 38 பள்ளிகள் மற்றும் ஐந்து விளையாட்டு விடுதி அணிகள் என, மொத்தம் 43 அணிகள் பங்கேற்கும், பள்ளிகள் இடையிலான மாநில ஹாக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி, இன்று துவங்குகிறது.
பங்கேற்கும் 43 அணிகளும் ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, இன்றும் நாளையும் ஆறு மைதானங்களில் போட்டிகள் நடக்கின்றன.
சென்னை மண்டலத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மற்றும் சென்னை ஆகிய ஏழு மாவட்ட அணிகள் இடம் பெற்று உள்ளன.
எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில், இன்று காலை 7:00 மணிக்கு துவங்கும் முதல் போட்டியில், சென்னை அணியை எதிர்த்து, திருவண்ணாமலை அணி களமிறங்குகிறது.