/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கம்பம் இருக்கு; விளக்கு இல்லை இணைப்பு சாலையில் அவலம்
/
கம்பம் இருக்கு; விளக்கு இல்லை இணைப்பு சாலையில் அவலம்
கம்பம் இருக்கு; விளக்கு இல்லை இணைப்பு சாலையில் அவலம்
கம்பம் இருக்கு; விளக்கு இல்லை இணைப்பு சாலையில் அவலம்
ADDED : ஜூலை 15, 2024 01:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மணலி:மணலி, சி.பி.சி.எல்., சந்திப்பு முதல் பகிங்ஹாம் கால்வாய் மேம்பாலம் வரையிலான, 1.5 கி.மீ., துாரத்திற்கு, 100க்கும் மேற்பட்ட தெருவிளக்கு கம்பங்கள் உள்ளன.
முறையான பராமரிப்பு இல்லாததால், கடந்த இரு மாதங்களாக இரவு வேளைகளில் அப்பகுதியே கும்மிருட்டாக மாறி, விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதேநேரம், பல இடங்களில் கம்பங்கள் மட்டுமே உள்ளன; விளக்குகள் இல்லை. இதன் காரணமாக, விபத்து மட்டுமின்றி, வழிப்பறி அச்சமும் நிலவி வருகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, மின்விளக்குகள் இல்லாத கம்பங்களுக்கு, விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.