/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சைவ சமய தொண்டர்கள் பிராட்வேயில் போராட்டம்
/
சைவ சமய தொண்டர்கள் பிராட்வேயில் போராட்டம்
ADDED : ஜூலை 15, 2024 01:52 AM

பிராட்வே:சைவ சமய தொண்டர்கள் அறக்கட்டளை மற்றும் அகில உலக சைவர்கள் கூட்டமைப்பு சங்கம் சார்பில், ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பிராட்வே கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று, அறவழி போராட்டம் நடத்தப்பட்டது. 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில் சைவ சமய தொண்டர்கள் அறக்கட்டளை நிறுவனர் பாலமுருகன் கூறியதாவது:
சிவனடியார்களுக்கு எதிராக, தமிழக அரசு உள்ளது. இறைவனுக்கு தொண்டு செய்யும் சிவனடியார்களை மதிக்க வேண்டும்.
குடமுழுக்கு, திருவிழா காலங்களில் கயிலாய வாத்தியம் இசைக்க வரும் சிவனடியார்களுக்கு, தேவாரம், திருவாசகம் போன்ற, பன்னிரு திருமுறைகளை பாடுவதற்கு, கோவில் வளாகத்தில் தனி இடம் ஒதுக்கி தர வேண்டும்.
பள்ளியறை பூஜைகளிலும், உற்சவ காலங்களிலும் சிவனடியார்கள் தொண்டு செய்வதற்கும், சங்கநாதம் முழங்குவதற்கும், வாத்தியங்கள் இசைப்பதற்கும், பன்னிரு திருமுறைகளை பாராயணம் செய்வதற்கும் எந்தவித தடையும் விதிக்க கூடாது.
விழா காலங்களில், சிவனடியார்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் உட்பட ஏழு கோரிக்கைகளை, தமிழக அரசிடம் வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.