sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கோயம்பேடு - அடையாறு வரை பந்தயம் பைக் ரேஸ் ரோமியோக்கள் 10 பேர் கைது

/

கோயம்பேடு - அடையாறு வரை பந்தயம் பைக் ரேஸ் ரோமியோக்கள் 10 பேர் கைது

கோயம்பேடு - அடையாறு வரை பந்தயம் பைக் ரேஸ் ரோமியோக்கள் 10 பேர் கைது

கோயம்பேடு - அடையாறு வரை பந்தயம் பைக் ரேஸ் ரோமியோக்கள் 10 பேர் கைது


ADDED : மே 27, 2025 01:11 AM

Google News

ADDED : மே 27, 2025 01:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர், கோயம்பேடு 100 அடி சாலை முதல் அடையாறு வரை 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள், கடந்த 24ம் தேதி இரவு, பைக் ரேசில் ஈடுபட்டனர்.

வாகன ஓட்டிகளுக்கு மத்தியில், அதிவேகமாகவும் தாறுமாறாக இயக்கியதால், பிற வாகன ஓட்டிகள் பீதியில் உறைந்தனர். பதற்றமடைந்த பலர் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அண்ணா நகர் போக்குவரத்து துணை மற்றும் உதவி கமிஷனர்கள், கோயம்பேடு, அண்ணா நகர் பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், வடபழனியைச் சேர்ந்த அப்துல் ஹாசிம், 18, சதாம் மொய்தீன், 22, அம்பத்துாரைச் சேர்ந்த சஞ்சய் குமார், 18, மற்றும் கோடம்பாக்கத்தைச் பொறியாளர் ஷேக் ஷாகுல் அகமது, 24.

மேலும், இரட்டை சகோதரர்களான அம்பத்துாரைச் சேர்ந்த முகமது ஹாசிப், 20, முகமது ஹாசிக், 20, மற்றும் மகேஷ் ராஜா, 22, சாய்குமார், 18, பிராட்வே நதீம் ஹுசைன், 24, கொடுங்கையூரைச் சேர்ந்த லோகேஷ்வர், 20, ஆகிய 10 பேரை அடையாளம் கண்டு, நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து, ஒன்பது பைக்குகள் பறிமுதல் செய்து, அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் தெரிய வந்ததாவது:

'வாட்ஸாப்'பில் தகவல் தெரிவிக்காமல், இன்ஸ்டாகிராமில் டீம் 1, 2, 3 ஆகிய பெயர்களில், குழுக்கள் அமைத்துள்ளனர். குழுவில் அறிவிக்கப்படும் நாளில், அண்ணா நகர், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில், நள்ளிரவு 12:00 மணிக்கு மேல், இளைஞர்கள் குவிந்து சாகசங்களில் ஈடுபட்டுள்ளனர். பந்தையம் முடிந்தபின், அண்ணா நகரில் இயங்கும் இரவு உணவகங்களில் வெற்றியை கொண்டாடியுள்ளனர்.

போலீஸ் விசாரிப்பதை தெரிந்த இளைஞர்கள், தாங்கள் பதிவிட்டிருந்த வீடியோக்களை அழித்தனர்.

இவ்வாறு விசாரணையில் தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us