/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிளாம்பாக்கத்தில் இருந்து 11 இடங்களுக்கு இணைப்பு பஸ் சி.எம்.டி.ஏ., அறிவிப்பு
/
கிளாம்பாக்கத்தில் இருந்து 11 இடங்களுக்கு இணைப்பு பஸ் சி.எம்.டி.ஏ., அறிவிப்பு
கிளாம்பாக்கத்தில் இருந்து 11 இடங்களுக்கு இணைப்பு பஸ் சி.எம்.டி.ஏ., அறிவிப்பு
கிளாம்பாக்கத்தில் இருந்து 11 இடங்களுக்கு இணைப்பு பஸ் சி.எம்.டி.ஏ., அறிவிப்பு
ADDED : பிப் 02, 2024 07:31 AM
சென்னை: சென்னையில், 11 வெவ்வேறு இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு இணைப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென் மாவட்டங்களுக்கான பேருந்துகளுக்காக கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் டிச., 30ல் திறக்கப்பட்டது. அனைத்து அரசு போக்குவரத்து கழக பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பயணியர் கிளாம்பாக்கத்துக்கு செல்ல அவதியுறுகின்றனர். இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது குறித்து சி.எம்.டி.ஏ., வெளியிட்ட அறிக்கை:
வண்டலுார், ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு மக்கள் சென்று வர, 2 மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேட்டுக்கு, 5 நிமிடத்துக்கு ஒன்று, கிண்டிக்கு, 3 நிமிடத்துக்கு ஒன்று, தாம்பரத்துக்கு, 2 நிமிடத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இத்துடன், சோழிங்கநல்லுார், வேளச்சேரி, திருவான்மியூர், தி. நகர், மாதவரம், அம்பத்துார், திரு.வி.க., நகர், செங்குன்றம், ஆவடி, பூந்தமல்லி, சிறுசேரி ஆகிய, 11 இடங்களுக்கு இணைப்பு பேருந்து சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் இருந்து பொது மக்கள் ஆட்டோ, கார்களில் செல்ல முன்பதிவு சேவை துவங்கப்பட்டுள்ளது. இதில், 642 ஆட்டோக்கள், 512 கார்கள் பதிவு செய்து இயங்கி வருகின்றன.
ஊரப்பாக்கம் - வண்டலுார் இடையே கிளாம்பாக்கத்தில், 20 கோடி ரூபாயில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள், நடை மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கிளாம்பாக்கத்துக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்கவும், ஊரப்பாகம் அயஞ்சேரி சந்திப்பில், ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து மேம்பாட்டுக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வெளிவட்ட சாலையில் ஆம்னி பேருந்து நிறுத்துமிட கட்டுமான பணிகள், ஆக., மாதத்தில் முடிக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
★★★

