/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கெட்டுப்போன அசைவ உணவு சாப்பிட்ட 16 பேர் மயக்கம்
/
கெட்டுப்போன அசைவ உணவு சாப்பிட்ட 16 பேர் மயக்கம்
ADDED : ஜன 26, 2024 12:35 AM
வேளச்சேரி, குன்றத்துாரைச் சேர்ந்தவர் சேக் ஜலாலுதீன், 36. இவரது உறவினர் திருமணத்திற்கு விருந்து வைக்க ஏற்பாடு செய்தார்.
அதற்காக 62 பேரை அழைத்துக் கொண்டு, வேளச்சேரி விரைவு சாலையில் உள்ள 'கூல் பார்பிக்யூ' துரித உணவகத்திற்கு, நேற்று முன்தினம் இரவு சென்றார்.
அசைவ உணவுகள் சாப்பிட்டு கொண்டிருந்த இவர்களில், குழந்தைகள் உட்பட 16 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்கள், அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தகலறிந்து வந்த வேளச்சேரி போலீசார், உரிமையாளர் அவாஸ் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
கடை நிர்வாகிகள், 'போதிய காற்றோட்டம் இல்லாமல், ஆக்சிஜன் குறைப்பாட்டால் அவர்கருக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறினர்.
பின், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வந்து, மயக்கம் அடைந்தோர் சாப்பிட்ட உணவுகளை ஆய்வு செய்தனர். இதில், கெட்டுப்போன பிரியாணி இருந்தது தெரிந்தது. இதையடுத்து, கடையை மூடி, 'நோட்டீஸ்' வழங்கினர்.
இதோடு, ஒவ்வொரு உணவுகளின் மாதிரியையும் எடுத்து, நெற்குன்றத்தில் உள்ள தனியார் ஆய்வகத்திற்கு அனுப்பினர். ஆய்வின் முடிவின் அடிப்படையில், கடை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோர் சிகிச்சை முடிந்து, நேற்று காலை வீடு திரும்பினர்.

