sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

காணும் பொங்கல் பாதுகாப்பு பணியில்... 17,000 போலீசார்! கடற்கரைகள் 'ட்ரோன்'களில் கண்காணிப்பு

/

காணும் பொங்கல் பாதுகாப்பு பணியில்... 17,000 போலீசார்! கடற்கரைகள் 'ட்ரோன்'களில் கண்காணிப்பு

காணும் பொங்கல் பாதுகாப்பு பணியில்... 17,000 போலீசார்! கடற்கரைகள் 'ட்ரோன்'களில் கண்காணிப்பு

காணும் பொங்கல் பாதுகாப்பு பணியில்... 17,000 போலீசார்! கடற்கரைகள் 'ட்ரோன்'களில் கண்காணிப்பு


ADDED : ஜன 17, 2024 12:00 AM

Google News

ADDED : ஜன 17, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் மெரினா, எலியட்ஸ், மாமல்லபுரம் கடற்கரைகள், தீவுத்திடல் பொருட்காட்சிக்கு, இன்று சுற்றுலா பயணியர் அதிகம் குவிவர் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 17,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், ட்ரோன் மற்றும் நவீன 'சிசிடிவி' கேமராக்கள் அமைத்து, கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆவடி மாநகர போலீஸ் கமிஷனரக எல்லைக்குள், 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

காணும் பொங்கல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கூடுதல் கமிஷனர்கள், பிரேம் ஆனந்த் சின்ஹா, சுதாகர், அஸ்ராகார்க் ஆகியோர், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் காணும் பொங்கலை பொதுமக்கள் கொண்டாடும் வகையில், பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடலில் இறங்க அனுமதி கிடையாது. கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

சென்னை காவல் துறை சார்பில் மெரினா, எலியட்ஸ் உள்ளிட்ட கடற்கரைகளிலும், பொழுதுபோக்கு பூங்காக்களிலும் பாதுகாப்பு பணியில், 15,500 போலீசார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படை வீரர்கள் என, 17,000 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் உள்ள மணற்பரப்பில், 13 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் மூன்று பேர் பணியமர்த்தப்படுவர்.

அடையாள அட்டை


கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால், உடனடியாக மீட்பதற்காக, சென்னை போலீஸ் கமிஷனரகம் மூலம் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகள், காவல் உதவி மையங்கள் மற்றும் தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

இதில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டி அனுப்பி வைக்கப்படுவர். எனவே, குழந்தைகளுடன் வரும் பெற்றோர், மேற்கூறிய காவல் உதவி மையங்களின் அடையாள அட்டை பெற்று கடற்கரைக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்படுவர்.

மெரினா மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்புகளில், தலா நான்கு ட்ரோன் கேமராக்கள் என, மொத்தம் எட்டு ட்ரோன் கேமராக்கள் வாயிலாக தீவிரமாக கண்காணிக்கப்படும். கடலோர மணற்பகுதிகளில் காவல்துறையின் எச்சரிக்கை வாசகங்கள் ஒலிபரப்பப்படும்.

சாலை பாதுகாப்பு


சாலை விபத்து தடுப்பு நடவடிக்கையாக, சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று, பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்குவர்.

இது மட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, மதுரவாயல் பை - பாஸ் சாலை, ஜி.எஸ்.டி., சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில், தடுப்புகள் அமைத்து போலீசார் சோதனையில் ஈடுபடுவர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வண்டலுார் பூங்கா தயார்

தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லையில், 1,200 போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு கடற்கரை சாலை, வண்டலுார் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வண்டலுார் உயிரியல் பூங்காவில், இன்று ஏராளமானோர் குவிவர் என்பதால் கூட்டத்தை சமாளிக்க, பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கூட்டம் கூடுவதை தடுக்க, க்யூ.ஆர்., குறியீடு வசதியுடன் கூடிய 10 டிக்கெட் கவுன்டர்கள். டிக்கெட்டுகளை உடனுக்குடன் 'ஸ்கேன்' செய்து உள்ளே அனுப்ப, ஏழு ஸ்கேனிங் இயந்திரங்கள், மெட்டல் டிடெக்டர், 20 இடங்களில் குடிநீர், கழிப்பறை, சிறுவர்கள் காணாமல் போனால் எளிதாக கண்டுபிடிக்கும் வகையில், கையில் ஸ்டிக்கர் ஒட்டுதல், மருத்துவ குழு, தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தவிர, வேலுார், விழுப்புரம் சரகங்களில் இருந்து, 100 வனத்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.மேலும், 100 போலீசார், 150 தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.



3,233 பஸ்கள்

கிளை மேலாளர்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்:பயணியர் வசதிக்காக, அனைத்து பணியாளர்களும் பணிக்கு வந்து, மாற்று பேருந்து உள்ளிட்ட 3,233 மாநகர பேருந்துகளையும் முழு அளவில் இயக்க வேண்டும். பொதுமக்களுக்கு, சிறப்பான எந்தவித புகாரும் இல்லாத அளவில் பேருந்துகளின் இயக்கத்தை உறுதி செய்ய வேண்டும். இன்று பணியாற்றும் அனைத்து ஓட்டுனர், நடத்துனர்களுக்கு மதிய உணவு செலவிற்கு, ஒருவருக்கு 50 ரூபாய் வீதம் இந்த ஆண்டும் வழங்க வேண்டும்.








      Dinamalar
      Follow us