/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இ.சி.ஆரில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
/
இ.சி.ஆரில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
ADDED : ஜன 26, 2024 12:32 AM
தாம்பரம், தமிழகத்தில் நடக்கும் 'கேலோ இந்தியா' இளைஞர் விளையாட்டு போட்டியின் ஒரு பகுதியாக, இன்று முதல் 28ம் தேதி வரை, அதிகாலை 5:00 மணி முதல் 12:00 மணி வரை, கிழக்கு கடற்கரை சாலையில், சைக்கிளத்தான் போட்டி நடத்தப்பட உள்ளது.
அதனால், கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் சந்திப்பிலிருந்து மாமல்லபுரம் மார்க்கத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாமல்லபுரம் - சென்னை தடத்தில், வாகனங்கள் வழக்கம்போல் செல்லலாம்.
அக்கரையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள், கோவளம் சந்திப்பில் வலது புறம் திரும்பி, ஓ.எம்.ஆர். சாலையை அடைந்து, இடது புறம் திரும்பி கேளம்பாக்கம், திருப்போரூர் வழியை பயன்படுத்த வேண்டும்.
வாகன ஓட்டிகள், போக்குவரத்து காவல் துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என, தாம்பரம் மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

