/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது/ சிறுமியரிடம் சில்மிஷம் காமுகனை பிடிக்க 3 தனிப்படை
/
பொது/ சிறுமியரிடம் சில்மிஷம் காமுகனை பிடிக்க 3 தனிப்படை
பொது/ சிறுமியரிடம் சில்மிஷம் காமுகனை பிடிக்க 3 தனிப்படை
பொது/ சிறுமியரிடம் சில்மிஷம் காமுகனை பிடிக்க 3 தனிப்படை
ADDED : பிப் 02, 2024 07:29 AM
திருவான்மியூர்: திருவான்மியூர் பகுதியில் சிறுமியரிடம் சில்மிஷம் செய்த காமுகனை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவான்மியூர் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியின் தந்தை, நேற்றுமுன்தினம் இரவு நீலாங்கரை மகளிர் போலீசில் அளித்த புகார் விவரம்:
எங்கள் பகுதியில் விளையாடி கொண்டிருக்கும் சிறுமியரை 30 வயது நபர் தனியாக அழைத்து சென்று பாலியல் சீண்டல் செய்துள்ளார். 4 வயது சிறுவனிடம் வழியாக, சிறுமிகளுக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். என் மகள் உட்பட இரண்டு சிறுமியர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
மகளிர் போலீசார், போக்சோ வழக்குப்பதிவு செய்து, சிறுவன் மற்றும் சிறுமியரிடம் விசாரித்தனர். இதன் அடிப்படையில், காமுகனை பிடிக்க மூன்று தனிப்படை அமைத்துள்ளனர்.