/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேடில் ரூ.300 கோடி வர்த்தகம்
/
கோயம்பேடில் ரூ.300 கோடி வர்த்தகம்
ADDED : ஜன 16, 2024 11:32 PM
சென்னை, பொங்கல் பண்டிகையை ஒட்டி, கோயம்பேடில் கடந்த 14ம் தேதி, பலவகை காய்கறிகள், விற்பனைக்கு குவிக்கப்பட்டது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் 400க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வந்தன.
பொங்கலின்போது பயன்படுத்தப்படும் பூசணிக்காய், மொச்சை, சேனைக்கிழங்கு, சர்க்கரைவள்ளி, மஞ்சள் கொத்து மற்றும் விழுப்புரம், கடலுார், மதுரை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து லாரிகளில் கரும்பு எடுத்துவரப்பட்டது.
மல்லிகை பூ 1 கிலோ 2,000 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது.
இதனால், 15 மற்றும் 16ம் தேதிகளில் மட்டும், 300 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடந்தது.
மளிகை சந்தையில் தனியாக 100 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடந்துள்ளது.

