/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓபன் செஸ் போட்டி 320 பேர் பங்றே்பு
/
ஓபன் செஸ் போட்டி 320 பேர் பங்றே்பு
ADDED : ஜன 27, 2024 12:46 AM

சென்னை, லோட்டஸ் செஸ் அகாடமி மற்றும் எஸ்.வி.ஏ., சாம்பியன்ஸ் செஸ் அகாடமி இணைந்து, சி.எம்.ஐ., டெசெல்லேட் ஓபன் பிடே ரேட்டிங் ராபிட் செஸ் போட்டி, நேற்று துவங்கியது. கேளம்பாக்கத்தை அடுத்த சிறுசேரி சிப்காட் பகுதியில் உள்ள சென்னை மேத்தமேட்டிக்ஸ் இன்ஸ்டிடியூட்டில் போட்டிகள் நடக்கின்றன.
சர்வதேச அளவிலான இப்போட்டியில், இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து, 320 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர். முதல் நாளான நேற்று, ஐந்து சுற்றுகள் நடந்தன.
இன்று மீதமுள்ள நான்கு சுற்றுகளுடன் போட்டிகள் நிறைவடைகின்றன. போட்டியில் வெற்றி பெறும் 65 பேருக்கு ரொக்கப் பரிசும், 60 பேருக்கு கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன. தவிர, பெண்கள், செங்கை வீரர், வெட்ரன் ஆகிய பிரிவுகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

