sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஒருதலை காதலுக்கு தடையாக இருந்தவரை கடத்திய 5 பேர் கைது

/

ஒருதலை காதலுக்கு தடையாக இருந்தவரை கடத்திய 5 பேர் கைது

ஒருதலை காதலுக்கு தடையாக இருந்தவரை கடத்திய 5 பேர் கைது

ஒருதலை காதலுக்கு தடையாக இருந்தவரை கடத்திய 5 பேர் கைது


ADDED : ஜூன் 01, 2025 12:27 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 12:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரும்பாக்கம்,

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர், பிரபல சினிமா இயக்குனர் சுசீந்திரன். இவர், தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வரும் ராஜகுமாரன், 23, என்பவரை காணவில்லை என, நேற்று முன்தினம் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து, அரும்பாக்கம் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், காணாமல் போன ராஜகுமாரன், நேற்று அதிகாலை அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார்.

தன்னை ஐந்து பேர் காரில் கடத்தி சென்று மிரட்டி, பணம் மற்றும் மொபைல் போன் பறித்து சென்றதாக, போலீசாரிடம் கூறினார்.

இதையடுத்து, ராஜகுமாரனை கடத்திய மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த சந்திரசேகர், 33, தி.நகர், கண்ணம்மாபேட்டையைச் சேர்ந்த லலித் ஆதித்யா, 21, சைதாப்பேட்டையைச் சேர்ந்த திவாகர், 21, கார்த்திகேயன், 25, அகஸ்டின், 21, ஆகிய ஐந்து பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து, எட்டு மொபைல் போன்கள், மூன்று இரு சக்கர வாகனங்கள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பின், போலீசார் கூறியதாவது:

ராஜகுமாரன் மதுரையில் கல்லுாரியில் படித்தபோது, இளம்பெண் ஒருவரை காதலித்துள்ளார். அந்த பெண், படிப்பு முடிந்ததும் சென்னை வந்து, பெசன்ட் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில், 2024ம் ஆண்டு அக்., மாதம் பணிக்கு சேர்ந்துள்ளார்.

அந்நிறுவனத்தின் உரிமையாளர் டேனியல்ராஜ் என்பவர், அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

அப்பெண், தான் ராஜகுமாரனை காதலிப்பதாக கூறியும், டேனியல்ராஜின் காதல் தொல்லை குறையாததால், அப்பெண் வேலையை விட்டு நின்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த டேனியல்ராஜ், சைதாப்பேட்டையைச் சேர்ந்த சிவசெந்தமிழன் என்ற வழக்கறிஞரை அணுகி, தன் ஒருதலை காதல் குறித்து தெரிவித்து உதவி கேட்டுள்ளார்.

அதன்பின், சந்திரசேகர் என்ற மற்றொரு வழக்கறிஞரை தொடர்பு கொண்ட சிவசெந்தமிழன், டேனியல்ராஜுக்கு உதவுமாறு கூறியுள்ளார்.

அதன்படி, நேற்று முன்தினம் இரவு, அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த ராஜகுமாரனின் இருசக்கர வாகனம் மீது, சந்திரேசகர் மற்றும் அவரது நண்பர்கள் வேண்டுமென்றே மோதி, வாக்குவாதம் செய்துள்ளனர்.

பின், அப்போது ஏற்பட்ட தகராறில், ராஜகுமாரனை காரில் கடத்திச் சென்றவர்கள், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானம் அருகே வைத்து தாக்கி, இளம்பெண்ணுடனான காதலை முறித்துக் கொள்ளாவிட்டால், கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.

பின், அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, ராஜகுமாரனை இறக்கி விட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். தலைமறைவாக உள்ள டேனியல்ராஜ், வழக்கறிஞர் சிவசெந்தமிழன் உள்ளிட்டோரை தேடி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us